அம்மி மிதித்தேன்
அருந்ததி பார்த்தேன்
அழகான மாலையை
கழுத்தில் சூடி மங்கள
வாத்தியம்
ஒளி முழங்க வாழ்த்து
மலா் தூவி....
பெற்றேன் தாலியை
கட்டிய மன்னவன்
மகிழ்வாய் தருவான்
வாசனை மலரை
நேசமோடு காத்திருக்கேன்
பாசமோடு வருவான் என்று
நெஞ்சில் நிறைந்த
ஆசையோடு
பார்த்திருக்கேன்
பரவசமாய்
பகல் முடியும் நேரம் வரை.....
No comments:
Post a Comment