Sunday, March 24, 2013

pennmai


அழகாய் பூக்குது மலா்கள் ஆயிரம்
ஆயினும் ஏனோ ஏங்குது உள்ளம்
மழலையில் நோக்கி
மகிழ்ச்சி கொள்ளுதே
துள்ளும்
மானாய் நோக்கினால்
மனம் தடுமாறுதே
வீனாய் போகுதே தோன்றும்
எண்ணம்
ஆணாய் பிறந்ததால் தடுமாறுதே
உள்ளம்
அறிவாய் பிறந்தால் பெண்ணுக்கு
இல்லை அடிமை
ஆணவம் இல்லாதிருப்பது
அதனினும் இனிமை
நானம் என்பது இவா்களின்
உடமை
பெண்மையை போற்றினால்
நாட்டுக்கே பெருமை
இதை ஏற்காவிடில் நம் மனம்
சிறுமை.....

Thursday, March 21, 2013

maaraatharaagam

yemaatram

விழியில் வந்தான் வித்தகனாய்
விழா கொண்டது எனதுள்ளம்
பருவம் வந்ததால்....!
பன்முனை தாக்குதல் என்னுள்ளே
ஏற்றம் பெற்றேன் எடுத்த முடிவால்
தவறில்லை என்றே
தோன்றியதால்...!
பசுமை நிறைந்த என்
நினைவை கணக்காய் சொன்னேன்
அவனிடத்தில்
கட்டிய மனைவி எனக்குண்டு
காதல் என்பதை மறந்தேனே
என்று கையை ஆட்டி
மறைந்தானே....

paasam


குரல் கேட்டு முகம் 
பார்த்து மனம் நிறைய
சிரிப்பை காட்டும்
பல்லில்லா வாயாலே
பரவசமாய் பாக்குதடி
இந்த பிஞ்சி
நாள் போகும் வழியாலே
வாய் பேச தொடங்கியதும்
ஓடிவருவாள் அன்னை
அம்மா என்ற சொல்லை
கேட்டு அடைந்திடுவாள்
பரவசமாய்
 

Thozhi

மனதை பறிகொடுத்தேன் 
பகிற்ந்த கொண்டேன் 
பல முறை
என் கதையை பயம் இன்றி
கேட்ட கதைக்கு பதில் 
சொல்ல...
கூடிய கோழி கூட்டம்
வாயை திறந்து வாழ்த்திய போது
என் மனதின் பாரம்
குறைந்து....
குளிர் பெற்றேன்
என் நெஞ்சிகுள்ளே
வந்தவனுக்கு
தெரியுமா நான் படும்பாடு
வாசலை தாண்டாத நான்
வாய் அடைக்க
தெரியாமல்
தோழியாக்கிக்கொண்டேன்
எங்கள் வீட்டு என் அருமை
கோழியை....

paarvai onre pothume

கல் மனம் கரையுதே கன்னி
இவள் பார்வையிலே..
கரைந்தோடும் கற்பனைகள்
ஓராயிரம் என்னுள்ளே
வேதனைகள் வந்த போதும்
சாதனைகள் செய்வேனடி
சாத்திரங்கள் ஒன்று கூடி
சூத்திரங்கள் சொன்னாலும்
ஆத்திரத்தில் உன்னை
மறவேனோ...!
காத்திருந்த காலமெல்லாம்
காளை இவன் நெஞ்சிக்குள்ளே
தேவியாய் நீ இருந்தாய்
ஆவலாய் நான்
வருவேன்
ஆசையாய் உனை காண
காத்திருப்பாய் என்
கண்ணே...!
கலங்காதே பத்திரமாய்
நீ இருக்காய் என் மனதினிலே....

vaazhthukal thoova


இனிக்குதே இனிக்குதே என்
வாழ்க்கை ஏன் இந்த
போராட்டம்
இருக்குமிடம்
குப்பை மேடேனும்
குறை என்றும் இல்லை
வருந்திய காலம் உண்டு
வார்த்தையில் சொல்ல
முடியாது
சாட்சிகள் உண்டு
சாகும் வரை மறையாது
பொருத்த காலம் போதும் என்று
முடித்து வைத்தான் என்
கடவுள்
இனிக்கும் கரும்பாய் இருக்கும்
இனி உன் வாழ்க்கை
என்று மனதார
வாழ்த்துங்களேன்....
 

paruvam

பூக்கும் பூவாய் நான் இருந்தேன்
அந்நாளில் 
ஆசை இல்லை அப்போது
வாசம் என்னை கவா்ந்ததால்
கைவசமானேன் உன்னிடத்தில்
பாசம் காட்டிய
பலபேரும் பருவம்
பெற்ற பின்
பார்க்கும் முறை மாறியதே
சிறகில்லா பறவையாய்
அடைபட்டேன் கூரை வேயபட்ட
கூண்டுக்குள்
சாயம் பூச சலனம் கொண்டது
கள்ளமில்லா என் மனது
அழகை பெற்றது
என் மேனி
ஆண்களின் பார்வைக்கு
வழியானது....

Alai paayuthe

அலைபாயுதே ஆளில்லா
நேரத்திலே
என் மனது கண்களும்
தேடுதே
கதை சொல்ல யாரையேனும்
வருத்தம் வேண்டாம்
தருவாய் உன் அன்பை
அழகான பெண்
மயிலே
சிந்தனையில் எப்போதும்
சுவற்றில் சாய்ந்தபடி நீ
இருந்தால்
அடி மனதும் துவண்டுவிடும்
விளையாட்டாய்
மறந்துவிடு
மனதோடு கதைபேச

Ethir paarthen


அம்மி மிதித்தேன்
அருந்ததி பார்த்தேன்
அழகான மாலையை
கழுத்தில் சூடி மங்கள
வாத்தியம்
ஒளி முழங்க வாழ்த்து
மலா் தூவி....
பெற்றேன் தாலியை
கட்டிய மன்னவன்
மகிழ்வாய் தருவான்
வாசனை மலரை
நேசமோடு காத்திருக்கேன்
பாசமோடு வருவான் என்று
நெஞ்சில் நிறைந்த
ஆசையோடு
பார்த்திருக்கேன்
பரவசமாய்
பகல் முடியும் நேரம் வரை.....